திடீர் பரபரப்பு.. கிராம நிர்வாக அலுவலர் தற்கொலை !!

திடீர் பரபரப்பு.. கிராம நிர்வாக அலுவலர் தற்கொலை !!

Update: 2022-07-07 06:30 GMT

ஆலங்குடி அருகே கிராம நிர்வாக அலுவலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா வேங்கிடகுளம் பகுதியை சேர்ந்தவர் ரெத்தினம் ஆன்றோ (28). இளம்வயதான இவர் கத்தக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தார். ரெத்தினம் ஆன்ரோ நேற்று மதியம் மற்றும் இவர் உணவு சாப்பிட வீட்டுக்கு வரவில்லை. இதனால் பெற்றோர்  அவரது செல்போனுக்கு கால் செய்தனர். எனினும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் சந்தேகம் அடைந்த ஆன்றோவின் தந்தை பீட்டர், வீட்டின் மாடியில் உள்ள அவரது அறைக்கு சென்று பார்த்தார். அப்போது ரெத்தினம் ஆன்றோ தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனால் அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். இந்த நிகழ்வு அங்கிருந்தவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை என்பதால் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Similar News