திடீரென பெய்த ஆலங்கட்டி மழை.. 100 பச்சை கிளிகள் உயிரிழந்த சோகம் !

திடீரென பெய்த ஆலங்கட்டி மழை.. 100 பச்சை கிளிகள் உயிரிழந்த சோகம் !

Update: 2022-05-03 07:00 GMT

ஆலங்கட்டி மழையால் நூற்றுக்கணக்கான கிளிகள் உயிரிழந்ததால் மக்கள் சோகமடைந்தனர். 

கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டினத்தில் நேற்று சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கினர். இந்த மழையின்போது இடையில் ஆலங்கட்டி மழையும் பெய்துள்ளது. திடீரென பெய்த ஆலங்கட்டி மழையை கண்டு அப்பகுதி மக்கள் வியந்தனர். 

ஆனால், இந்த மழையால் அங்கு மக்கள் பெரும் சோகமடைந்தனர். அதாவது ஆலங்கட்டி மழையால் அங்குள்ள மரம் வேருடன் முறிந்து விழுந்துள்ளது. இந்த மரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கிளிகள் வசித்துவந்த நிலையில், அவை கிளையில் சிக்கி பறந்த செல்ல முடியாமல் தவித்துள்ளன.

இதையடுத்து மரம் முறிந்து விழுந்த நிலையில் நூற்றுக்கணக்கான கிளிகள் உயிரிழந்துள்ளன. மரம் விழுந்த விபத்தில் சிக்கியும், ஆலங்கட்டி மழையால் காயப்பட்டும் இந்த கிளிகள் உயிரிழந்துள்ளன. இந்த சம்பவத்தால் சோகமடைந்த அப்பகுதி மக்கள் கிளிகளை சேகரித்து முறைப்படி அடக்கம் செய்து அஞ்சலி செலுத்தியுள்ளனர். 

அதேபோல், மாண்டியா பகுதியில் பெய்த தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 30க்கும் மேற்பட்ட வீடுகள் பெரும் சேதத்தை சந்தித்துள்ள நிலையில், விவசாயிகள் பயிரிட்டிருந்த தென்னை, வாழை, கரும்பு ஆகிய பயிர்கள் சேதமடைந்துள்ளன.

newstm.in

Tags:    

Similar News