திடீர் உத்தரவு.. பெண்கள் மட்டும் வெளியே செல்ல காவல்துறை அனுமதி !!

திடீர் உத்தரவு.. பெண்கள் மட்டும் வெளியே செல்ல காவல்துறை அனுமதி !!

Update: 2022-04-15 08:04 GMT

அத்தியாவசிய பொருட்கள் வாங்க பெண்கள் மட்டும் வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

நாட்டின் வடமாநிலங்களில் பல இடங்களில் ராமநவமி விழா, ஊர்வலத்தில் வன்முறை ஏற்பட்டுள்ளது. உத்தரபிரதேசம், பீகார், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் ராமநவமி விழாவில் இரு தரப்பினர் இடையே வன்முறை உண்டாது. இந்த விவகாரம் பெரும் விவாததத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அந்த வகையில், மத்திய பிரதேசத்தில் ஏற்பட்ட வன்முறையால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள கார்கோன் நகரில், பெண்கள் மட்டும் வெளியே செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

மத்திய பிரதேசத்தில், முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள, கார்கோனில் கடந்த 10ஆம் தேதி ராமநவமி விழாவை முன்னிட்டு, ராம பக்தர்கள் ஊர்வலம் சென்றனர். அப்போது, திடீரென இரு தரப்பினர் இடையே பங்கர மோதல் வெடித்தது. இதனால் அந்நகரம் முழுவதும் வன்முறை ஏற்பட்டது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் அவர்களை கலைத்தனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  இதையடுத்து, கார்கோனில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. கலவரத்தில் தொடர்புடைய, 121 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்; 89 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நான்கு நாட்கள் அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவு தற்போது சிறது தளர்த்தப்பட்டுள்ளது. அதாவது ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே அதுவும் பெண்கள் மட்டுமே வெளியே செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, நேற்று காலை 10:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை தளர்த்தப்பட்டது. இதில், அத்தியாவசிய பொருட்கள் வாங்க பெண்கள் மட்டும் வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதனால், ஏராளமான பெண்கள், கடைகளில் குவிந்தனர். 

newstm.in

Tags:    

Similar News