சன் டிவி நடிகை திடீர் திருமணம்.. வைரலாகும் வீடியோ - பிரபலங்கள் வாழ்த்து !!

சன் டிவி நடிகை திடீர் திருமணம்.. வைரலாகும் வீடியோ - பிரபலங்கள் வாழ்த்து !!

Update: 2022-02-13 20:00 GMT

கண்மணி சீரியல் நடிகை சாம்பவி, தனது காதலனை கரம் பிடித்தார். 

சன் டிவியில் ஒளிபரப்பான கண்மணி தொடரில் முத்து செல்வி என்ற வேடத்தில் நடித்தவர் சாம்பவி. கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட தடங்கல்களால் இந்தத் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது.  இவர் தற்போது சன் டிவியில் வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகி வரும் கயல் சீரியலின், தெலுங்கு பதிப்பான சாதனா என்ற சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார். மேலும் விண்ணைதாண்டி வருவாயா சீரியலிலும், சில தெலுங்கு சீரியல்களிலும் நடித்துள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சாம்பவி தமிழ் மற்றும் தெலுங்கு சீரியல் உலகில் மிகவும் பிரபலமானவர்.


இந்த நிலையில் சாம்பவிக்கு நேற்று (பிப்.11) திருமணம் நடைபெற்றது. சாம்பவி தனது நீண்ட நாள் காதலரான பிரசன்னா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோவை சாம்பவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சாம்பவிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் நட்சத்திரா, ரோகிணி உள்ளிட்ட சின்னத்திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

newstm.in

Tags:    

Similar News