சூப்பர்! தேர்தல் நடைமுறைகளில் 3ஆம் பாலினத்தவர் பங்கேற்க நடவடிக்கை!!
சூப்பர்! தேர்தல் நடைமுறைகளில் 3ஆம் பாலினத்தவர் பங்கேற்க நடவடிக்கை!!
வாக்காளர் பட்டியலில் ஆண்கள், பெண்களைப் போலவே மூன்றாம் பாலினத்தவரையும் அவர்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப சேர்க்க வேண்டும் என தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் மாநில பிரிவுகள் இதற்காக பிரத்யேக முயற்சியை தற்போது கையில் எடுத்துள்ளது. அதன்படி, மூன்றாம் பாலினத்தவர்களையும் தேர்தல் நடைமுறைகளில் முழுமையாக பங்கேற்க வைக்க மகாராஷ்டிரா தேர்தல் ஆணையம் புதிய ஆய்வு நடத்த உள்ளது.
இதன் படி, தகுதி கொண்ட மூன்றாம் பாலினத்தவர்கள் இருவருக்கு ஆண்டுதோறும் ரூ.1.50 லட்சம் உதவித் தொகை வழங்கி, அவர்கள் இந்த ஆய்வுப் பணியில் களமிறக்கப்பட உள்ளனர். இவர்கள் மூன்றாம் பாலினத்தவர்கள் குறித்து விரிவான ஆய்வு நடத்தி அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.
மூன்றாம் பாலினத்தவர்களின் மக்கள்தொகை, அவர்களின் வாழ்க்கை நிலை, அவர்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அதை தீர்க்கும் வழிகள் ஆகியவற்றை கண்டறிந்து அவர்களையும் ஜனநாயக நடைமுறைகளில் விரிவாக பங்கேற்க வைக்க வேண்டும்.
குறிப்பாக அவர்களுக்கு அடிப்படை அரசு திட்டங்களான பொது விநியோகத் திட்டம், வீடு, மருத்துவ வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்தித் தர வேண்டும். இந்த சலுகைகளை பெற உரிய ஆவணங்களை அவர்களுக்காக உருவாக்கித் தர வேண்டும்.
மூன்றாம் பாலினத்தவர்கள் அதிகம் கொண்ட மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்டிராவில் தேர்தல் ஆணையத்தின் பல்வேறு முயற்சிக்குப் பின்னரும், வாக்காளர் பட்டியலில் இதுவரை 3,520 மூன்றாம் பாலினத்தவர்கள் தான் பதிவு செய்துள்ளனர்.
newstm.in