சூப்பர்! மீண்டும் தொடங்குகிறது மதுரவாயல் பறக்கும் சாலை பணி!!

சூப்பர்! மீண்டும் தொடங்குகிறது மதுரவாயல் பறக்கும் சாலை பணி!!

Update: 2022-05-17 07:38 GMT

போக்குவரத்து நெரிசல் காரணமாக, சென்னை துறைமுகத்துக்கு செல்ல வேண்டிய சரக்கு வாகனங்கள், பல ஆண்டுகளாக ஆந்திராவில் உள்ள துறைமுகங்கள் வழியாக செல்கின்றன. இதன் காரணமாக  தமிழ்நாட்டின் வருவாய் பாதிக்கப்பட்டு வந்தது.

இதனை தவிர்க்க கடந்த 2007ஆம் ஆண்டு அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி தலைமையிலான திமுக அரசு மதுரவாயல் முதல் எண்ணூர் துறைமுகம் வரை  1655 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் அமைக்க முடிவு செய்தது.

இத்திட்டத்திற்கு  2009ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், அடிக்கல் நாட்டினார்அதற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில்சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்தது. அதனை தொடர்ந்து, பணிகள்  தொடங்கப்பட்டு  தூண்கள் அமைக்கப்பட்டன.

பின்னர் வந்த அதிமுக ஆட்சியில் இப்பணிகள் கிடப்பில் போடப்பட்டன. கூவம் ஆற்றில் தூண்கள் அமைப்பதால் சுற்றுச்சூழல் பிரச்னை ஏற்படும் எனக்கூறி  திட்டத்தை ஜெயலலிதா முடக்கினார் 

இந்நிலையில்,சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் எல் & டி நிறுவனத்தால் மறுவடிவமைப்பு செய்யப்படும் என்றும் இரண்டு மேம்பாலங்கள் அமைக்கப்படும் என்றும் கடந்த பிப்ரவரி மாதம், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்திருந்தார்

தமிழ் நாடு பட்ஜெட்டில் பறக்கும் சாலை திட்டத்தை செயல்படுத்த 5770 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் இத்திட்டத்தை விரைவாக செயல்படுத்த, சென்னை தலைமை செயலகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம்  நேற்று கிழமை கையெழுத்தானது.

இத்திட்டத்தில் சிவானந்தா சாலை முதல் கோயம்பேடு வரை ஈரடுக்கு மேம்பாலம் அமையவுள்ளது. அதில் கீழ் அடுக்கில் உள்ளுர் வாகனங்களும், மேல் அடுக்கில் துறைமுகம் செல்லும் வாகனங்களும் செல்லும் வகையில் உருவாக்கப்படவுள்ளது.  இந்த திட்டத்திற்கு வரும் 26ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்ட உள்ளார்.

newstm.in

Similar News