சூப்பர்! பொதுத்தேர்வு எழுதாத 6 லட்சம் பேருக்கு அரிய வாய்ப்பு!!

சூப்பர்! பொதுத்தேர்வு எழுதாத 6 லட்சம் பேருக்கு அரிய வாய்ப்பு!!

Update: 2022-06-02 09:34 GMT

10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்காதவர்களை கண்டறிந்து துணைத் தேர்வு எழுத வைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மே மாதம் முதல் வாரத்தில் தொடங்கிய பொதுத்தேர்வு அண்மையில் முடிவடைந்தது. 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது முதலே தினசரி பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பொதுத் தேர்வில் பங்கேற்கவில்லை என அரசு தேர்வுகள் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கொரொனோ பெருந்தொற்று காலத்தில் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளி பொதுத்தேர்வு  மீதான அச்சம் போன்றவை மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு வராததற்கு காரணமாக முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்காத 6,49,467 மாணவர்களை இந்த ஆண்டு நடைபெற உள்ள துணைத் தேர்வில் உடனடியாக தேர்வு எழுத வைக்க  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

newstm.in

Similar News