சூப்பர்! ரூ.600 கோடி சொத்தை ஏழைகளுக்கு கொடுத்த மருத்துவர்!!
சூப்பர்! ரூ.600 கோடி சொத்தை ஏழைகளுக்கு கொடுத்த மருத்துவர்!!
மருத்துவர் ஒருவர் தனது 600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை ஏழை மக்களுக்கு தானமாக வழங்கியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலம், மொராதாபாத் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் குமார் கோயல் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர், தனது மனைவி ரேணு, இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகளுடன் வசித்து வருகிறார்.
இவர் ஒரு மருத்துவராக மட்டுமல்லாமல் சமூக ஆர்வலராகவும் இருந்து வருகிறார். ஏழை எளியவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் சிறப்பான வைத்தியம் பார்த்து வருகிறார். முன்னாள் குடியரசு தலைவர்களான அப்துல் கலாம், பிரதீபா தேவி பாட்டீல், பிரணாப் முகர்ஜி மற்றும் தற்போதைய குடியரசு தலைவரான ராம்நாத் கோவிந்த் ஆகியோர் கைகளில் 4 முறை விருது வாங்கியுள்ளார்.
இந்த நிலையில், மருத்துவர் அரவிந்த் கோயல் தற்போது தனது சொத்து முழுவதையும், ஏழைகளுக்கு உதவுவதற்காக உத்திரபிரதேச மாநில அரசுக்கு தானமாக வழங்கியுள்ளார். அவரின் மொத்த சொத்து மதிப்பு 600 கோடி ரூபாய்.
இவர் கொரோனா ஊரடங்கு அமல்படுத்திய போது மொராதாபாத்திலுள்ள 50 கிராமங்களை தத்தெடுத்து, அங்குள்ள மக்களுக்கு தேவையான வசதிகளை இலவசமாக வழங்கியுள்ளார். இவரின் இந்த செயல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதோடு அனைவரும் இவரை பாராட்டி வருகின்றனர்.
newstm.in