சூப்பர்! பள்ளிக்கு குதித்து குதித்து சென்ற சிறுமிக்கு கிடைத்தது செயற்கை கால்!!

சூப்பர்! பள்ளிக்கு குதித்து குதித்து சென்ற சிறுமிக்கு கிடைத்தது செயற்கை கால்!!

Update: 2022-05-28 17:38 GMT

பீகாரில் பள்ளி மாணவி ஒருவர் ஒற்றைக்காலுடன் குதித்து குதித்து பள்ளிக்கு சென்ற வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து அவருக்கு செயற்கை கால் கிடைத்துள்ளது.

ஜாமுய் மாவட்டத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமியான சீமா மான்ஜி என்பவரின் தந்தை கூலி தொழிலாளி. சீமாவின் தாயார் செங்கல் சூளையில் வேலை பார்க்கிறார். சீமாவின் உடன் பிறந்தோர் 5 பேர்.

ஆறு குழந்தைகளில் இரண்டாவது குழந்தையான சீமாவுக்கு இரண்டு ஆண்டுகள் முன் விபத்தில் சிக்கியதில் ஒரு கால் இல்லாமல் போனது. விபத்தில் தனது ஒரு காலை இழந்தாலும் நம்பிக்கையை இழக்காமல் தினமும் ஒரு கிமீ தூரம் ஒற்றை காலிலேயே பள்ளிக்கு சென்று படித்து வந்தார்.

தனது வீட்டிலிருந்து தினமும் ஒரு கிலோ மீட்டர் தூரம் உற்சாகம் குறையாமல் பள்ளி செல்லும் சிறுமி சீமாவின் வீடியோ இணையதளத்தில் தற்போது வைரலானது. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பாலிவுட் நடிகர் சோனு சூட் உள்ளிட்ட பலர் வியந்து பாராட்டி உதவிக்கரம் நீட்டிய நிலையில், அம்மாநில அரசு செயற்கை கால் பொருத்த உடனடியாக உத்தரவிட்டது.


அதன் பேரில் அம்மாநிலத்தின் கல்வித்துறை சார்பில் சிறுமி சீமாவுக்கு வெற்றிகரமாக செயற்கை கால் பொருத்தப்பட்டுள்ளது. புதிய காலுடன் சீமா நிற்கும் புகைப்படத்தை ட்விட்டரில் ஐஏஎஸ் அலுவலர் அவானிஷ் சரண் பகிர்ந்துள்ளார். மாணவி சீமாவுக்கு நடிகர் சோனு சூட்டின் தொண்டு நிறுவனமும் உதவி செய்ய முன்வந்துள்ளது.

newstm.in

Similar News