சூப்பர்! முக்கிய மருந்துகளின் விலை 70% வரை குறைகிறது!!
சூப்பர்! முக்கிய மருந்துகளின் விலை 70% வரை குறைகிறது!!
புற்றுநோய், நீரிழிவு நோய் மற்றும் இருதய நோய்கள் போன்ற சில முக்கியமான நோய்களுக்கான மருந்துகளின் விலையை ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் கணிசமாகக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
60% க்கும் அதிகமான நோயாளிகள் மருந்துக்காக அதிகம் செலவு செய்கின்றனர். சுகாதாரச் செலவைக் குறைப்பதன் மூலம் பல நோயாளிகளுக்கு பண ரீதியாகவும் நிவாரணம் அளிக்க முடியும் என்ற நோக்குடன் அரசாங்கம் சில பரிந்துரைகளை தயாரித்துள்ளது.
ஆனால் அறிவிப்பு பரிசீலனையில் உள்ளது. சில முக்கியமான மருந்துகளின் அதிக விலையை ஒழுங்குபடுத்துவதில் அரசு ஆர்வமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த அரசின் முன்மொழிவு நிறைவேறினால், 70% வரை விலைக் குறைப்பு இருக்கும் என்று தெரிகிறது.
இந்த முன்மொழிவு குறித்து விவாதிக்க சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மருந்துத் துறையின் பிரதிநிதிகளை நாளை சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார். மருந்துகளின் விலைகளின் பகுப்பாய்வுபடி, சில மருந்துகளின் வர்த்தக வரம்பு 1000% வரை அதிகமாக இருப்பதைக் காட்டுகிறது.
அரசின் நேரடி விலைக் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட மற்ற அனைத்து மருந்துகளுக்கும் விலையை நிர்ணயிக்க நிறுவனங்களுக்கு சுதந்திரம் உண்டு. அத்தகைய மருந்துகளின் விலையை ஆண்டுதோறும் 10% மட்டுமே அதிகரிக்க முடியும்.
இத்தகைய மருந்துகளின் வர்த்தக வரம்பு மிக அதிகமாக உள்ளதோடு, நோயாளிகளை வணிக ரீதியில் பாதிக்கிறது. இதன் விளைவாக 526 பிராண்டுகளின் MRP இல் 90% குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
newstm.in