சூப்பர் குட் நியூஸ்.. கேன்சரை முற்றிலும் குணமாக்கும் மருந்து கண்டுபிடிப்பு..!
சூப்பர் குட் நியூஸ்.. கேன்சரை முற்றிலும் குணமாக்கும் மருந்து கண்டுபிடிப்பு..!
அமெரிக்காவின் மேன்ஹட்டானில் உள்ள ஸ்லோன் கெட்டரிங் நினைவு புற்றுநோய் மையம் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் புற்று நோயை 100 சதவீதம் குணப்படுத்தும் டோஸ்டார்லிமாப் (dostarlimab) என்ற மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த மருந்தின் மூலம் சோதனை செய்யப்பட்ட அனைவரும் 100 சதவிகிதம் கேன்சரில் இருந்து முற்றிலும் குணம் அடைந்துள்ளனர்.
சோதனையில் பங்கேற்ற நோயாளிகளுக்கு கீமோதெரபி மருத்துவ சிகிச்சைகளை வழங்காமல், டோஸ்டார்லிமாப் மருந்து கொடுத்து குணமடையச் செய்துள்ளனர்.
மொத்தம் 18 குடல் புற்று நோயாளிகளுக்கு இந்த மருந்து கொடுக்கப்பட்டது. இந்த மருந்து கொடுத்தபின் அவர்கள் முற்றிலும் அந்த நோயில் இருந்து குணமடைந்துள்ளனர்.
எம்ஆர்ஐ, பிஇடி எனப்படும் பாஸிட்ரான் எமிஷன் டோமோகிராபி என்று அனைத்து சோதனையிலும் கேன்சர் உடலில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நோயாளிகள் சிலர் ஏற்கனவே வேறு விதமான சிகிச்சைகளை பெற்று, அதன் காரணமாக குணப்படுத்த முடியாத நிலையை அடைந்து, அதன்பின் இந்த டோஸ்டர்லிமாப் என்ற மருந்து கொடுக்கப்பட்டு குணப்படுத்தப் பட்டுள்ளனர்.
இதற்காக அவர்களின் உடலில் எந்த விதமான ஆபரேஷன் செய்யப்படவில்லை. பொதுவாக கேன்சர் நோய் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெறும் நபர்களுக்கு, சிகிச்சைக்கு பின் பக்க விளைவுகள் இருக்கும். ஆனால் இவர்களுக்கு அந்த மாதிரியான பக்க விளைவுகள் எதுவும் இல்லை.
அதேபோல், சிகிச்சை அளிக்கப்பட்டு 25 மாதங்கள் கழிந்தும் அவர்களுக்கு மீண்டும் கேன்சர் செல்கள் எதுவும் தோன்றவில்லை என்று டோஸ்டர்லிமாப் மருந்தை ஸ்பான்சர் செய்த கிளாக்ஸோ ஸ்மித் லைன் என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆய்வு கட்டுரையை எழுதியுள்ள டாக்டர் ஆண்ட்ரியா செரிக், இந்த மருந்து சிறப்பாக செயல்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.