சூப்பர் நியூஸ்.. இவர்களுக்கு வட்டியில்லா வீட்டுக்கடன்.. அரசு அறிவிப்பு..!

சூப்பர் நியூஸ்.. இவர்களுக்கு வட்டியில்லா வீட்டுக்கடன்.. அரசு அறிவிப்பு..!

Update: 2022-05-21 10:22 GMT

தமிழக அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுக் கடன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘மத்திய அரசின்‌ தேசிய ஊனமுற்றோர்‌ நிதி மற்றும்‌ வளர்ச்சிக்‌ கழகத்தின்‌ மூலம்‌ மாற்றுத்திறனாளிகள்‌ அதிக எண்ணிக்கையில்‌ பொருளாதார வளர்ச்சி எய்தும்‌ வகையில்‌ சுய தொழில்‌ திட்டங்களுக்கு நிதி உதவி வழங்க மாநில அரசு முனைப்புடன் செயல்படுகிறது.

இந்தத் திட்டத்தினை செயல்படுத்தும்‌ நிறுவனமாக தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கியை மத்திய அரசு நியமித்துள்ளது. மாற்றுத்திறனாளிகள்‌ அருகிலுள்ள கூட்டுறவு வங்கிகளில்‌ கடன்‌ பெற்று, பொருளாதார ரீதியாக தங்களை மேம்படுத்திக்‌ கொள்ள ஏதுவாக மாநில அரசு, கூட்டுறவு வங்கிகளின்‌ மூலம்‌ வட்டியில்லாக்‌ கடனை அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வட்டி தொகை முழுவதையும்‌ மாநில அரசே ஏற்றுக்கொள்கிறது.


தமிழ்நாடு மாநில தலைமைக்‌ கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர்‌, அவர்களின்‌ கடிதத்தில்‌, மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில்‌ தொடங்க கூட்டுறவு வங்கிகளின்‌ மூலம்‌ வட்டியில்லா கடன்‌ வழங்கும்‌ திட்டம்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதனை தொடர்ந்து, தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டு கடன்‌ பெறும்‌ வசதியும்‌ புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திட தங்கள்‌ மாவட்டத்தில்‌ உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும்‌ இத்திட்டம்‌ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, சிறப்பு முகாம்கள்‌ நடத்தி, தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள்‌ பயன்பெற உரிய நடவடிக்கைகள்‌ மேற்கொள்ள வேண்டும்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News