சூப்பர்.. பொது இடத்தில் புகைப்பிடித்தால் ரூ.2,000 அபராதம் !!

சூப்பர்.. பொது இடத்தில் புகைப்பிடித்தால் ரூ.2,000 அபராதம் !!

Update: 2022-06-04 10:15 GMT

தமிழகத்தில் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு 2,000 ரூபாய் அபராதம் விதிக்கும் நடைமுறை விரைவில் அமலுக்கு வர உள்ளது.

புகைப்பிடிக்க தடை என பொதுஇடங்களில் எச்சரிக்கை பலகை வைத்திருந்தாலும் அதனை யாரும் கடைபிடிப்பதில்லை. இன்றைய இளைஞர்கள் மத்தியிலும் புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரித்துவிட்டது.

இந்தியாவில் குப்பையில் கொட்டப்படும் புகையிலை கழிவு பொருட்களை சுத்தப்படுத்த ஆண்டுக்கு 76.66 கோடி ரூபாயை அரசு செலவிடுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் புகையிலை பொருட்கள் கட்டுப்பாட்டு சட்டம் - 2003 அமலில் இருந்தாலும், அவற்றை அரசு தீவிரப்படுத்ததால் ஆண்டுக்கு 82.38 லட்சம் கிலோ புகையிலைக் கழிவுகள் சேகரிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து, புகையிலை பயன்பாட்டிற்கு எதிரான அமைப்பின் நிர்வாகி சிரில் அலெக்சாண்டர் கூறியதாவது, மொத்த குப்பை சுத்தம் செய்வதில் 10 சதவீத தொகையை புகையிலை பொருட்களை சுத்தம் செய்ய அரசு செலவிடுகிறது.அதனால் ஏற்படும் மாசை சுத்தப்படுத்துவதற்கான கட்டணத்தை, பயன்படுத்துவோரிடம் இருந்து வசூலிக்க வேண்டியது அவசியம். அதன்படி, பொது இடங்களில் புகையிலை பயன்படுத்துவோருக்கு விதிக்கப்படும் அபராத தொகையை 200 ரூபாயில் இருந்து, 2,000 ஆக உயர்த்துவதற்கான சட்டம் விரைவில் அமலுக்கு வர உள்ளது.

தமிழகத்தில் பொது இடங்களில் புகையிலை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க, பொது சுகாதாரத்துறை, காவல்துறை, உள்ளாட்சி அமைப்புகள், பள்ளி, கல்லுாரி ஆசிரியர்கள் உட்பட 21 பேருக்கு புகையிலை பொருட்கள் கட்டுப்பாடு சட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை பின்பற்றி யாரும் செயலாற்றாததால், பேருந்து நிலையங்கள், டீக் கடைகள், வாகனம் ஓட்டும்போது என பொது இடங்களில் சிகரெட், புகையிலை பொருட்கள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.

இவர்கள் வாயிலாக, புகையிலையை பயன்படுத்தாதோருக்கு சுவாச பிரச்சனை, புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பொது இடங்களில் புகையிலை பயன்பாட்டை தடுக்க, தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு, அவர் கூறினர்.

பொது இடத்தில் புகை பிடித்தால், 2,000 ரூபாய் அபராதம் விதிக்க, பார்லிமென்டில் மத்திய அரசு சட்ட மசோதாவை தாக்கல் செய்துள்ளது. விரைவில், நடைமுறைக்கு வர உள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்திலும், பொது இடத்தில் புகை பிடிப்போருக்கு எதிரான நடவடிக்கைகள் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

Similar News