சூப்பர் அறிவிப்பு! தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை இடையே உயர்மட்ட சாலை!!

சூப்பர் அறிவிப்பு! தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை இடையே உயர்மட்ட சாலை!!

Update: 2022-04-13 06:15 GMT

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில்  தேனாம்பேட்டையில் இருந்து சைதாப்பேட்டை வரை ரூ.485 கோடி மதிப்பில் உயர் மட்ட சாலை அமைக்கப்படும் என்று அமைச்சர் ..வேலு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பொதுப் பணித்துறை மீதான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. அப்போது பதிலுரையில் பேசிய அமைச்சர் ..வேலு, செங்கல்பட்டு நகரத்தை திருச்சி, புதுக்கோட்டை, மானாமதுரை வழியாக தூத்துக்குடி துறைமுகத்துடன் இணைக்கும் துறைமுக சாலையை நான்கு வழித் தடச்சாலையாக அமைக்க விரிவான திட்ட அறிக்கை ரூ.4 கோடி மதிப்பில் தயாரிக்கப்படும் என்றார்.

இதேபோல், கோயம்புத்தூர், பொள்ளாச்சி, பழனி, ஆத்தூர், காரியாப்பட்டி வழியாக தூத்துக்குடி துறைமுகத்துடன் இணைக்கும் தொழிற்தட - துறைமுக சாலையை நான்கு வழித் தடச்சாலையாக அமைக்க விரிவான திட்ட அறிக்கை ரூ.4 கோடி மதிப்பில் தயாரிக்கப்படும் என்றும் அறிவித்தார்.

மேலும்நடப்பு ஆண்டில் 150 கி.மீ. சாலைகளை நான்கு வழித்தடமாகவும், 600 கி.மீ. சாலைகளை இரு வழித்தடமாகவும் ரூ.2300 கோடி மதிப்பில் அகலப்படுத்தி மேம்படுத்தப்படும்

அனைத்துக் கால நிலைகளிலும் தாங்கும் தடையற்ற போக்குவரத்து என்ற திட்டத்தின் கீழ் 435 தரை பாலங்களை, உயர்மட்ட பாடங்களாக 1,105 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டும். கோவை மாநகருக்கு மேற்கு வட்டச்சாலை பகுதி-1, திருச்செங்கோடு நகர் மற்றும் திருவண்ணாமலை நகருக்கு புறவழிச்சாலை ரூபாய் 500 கோடி மதிப்பில் அமைக்கப்படும்.

சென்னை அண்ணா சாலையில் 5 குறுக்கு சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வண்ணம் தேனாம்பேட்டை முதல் எல்டாம்ஸ் சாலை சந்திப்பு, எஸ்...டி. கல்லூரி சாலை சந்திப்பு, செனெடாப் சந்திப்பு, நந்தனம் சந்திப்பு மற்றும் சி..டி. சாலை சந்திப்புக்களை கடந்து சைதாப்பேட்டை பேருந்து நிலையம் வரை ரூ. 485 கோடி மதிப்பில் உயர்மட்ட சாலை அமைக்கப்படும் என்றும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Similar News