சூப்பர் அறிவிப்பு! மகிழ்ச்சியில் ரயில் பயணிகள்!!
சூப்பர் அறிவிப்பு! மகிழ்ச்சியில் ரயில் பயணிகள்!!
இனி ரயில்களில் குளிர்சாதன வகுப்பில் பயணிப்பவர்களுக்கு போர்வை, கம்பளி, திரைச்சீலைகள் வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
ரயில்வே வழங்கி வந்த இந்த வசதி 2020 ஆம் ஆண்டு கோவிட் காரணமாக நிறுத்தப்பட்டது. கொரோனா தொற்றுநோய்களின் போது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக, ரயிலில் முன்பதிவு செய்யப்படாத கோச்களை இணைக்கவும் முடிவு எடுக்கப்பட்டது.
ரயில்வேயின் இந்த நடவடிக்கையால் கோடிக்கணக்கான பயணிகள் முன்பு போல் மலிவான டிக்கெட்டில் பயணம் செய்ய முடியும். இந்நிலையில் தற்போது இப்போது ஏசி பெட்டிகளில் படுக்கை விரிப்பு, போர்வைகள், திரைச்சீலைகள் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அனைத்து ரயில்வே மண்டல பொது மேலாளர்களுக்கும் ரயில்வே வாரியம் அளித்துள்ள உத்தரவில், 'ஏசி' பெட்டிக்குள் படுக்கை விரிப்பு, போர்வை, திரைச்சீலைகள் வழங்கும் பணியை உடனடியாக துவங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 பாதிப்பு அதிகரித்ததை அடுத்து, 2020இல் முன்னெச்சரிக்கையாக ஏசி பெட்டிகளில் கொடுக்கப்பட்ட இந்த வசதியை ரயில்வே நிறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in