சூப்பர் வாய்ப்பு.. செல்போனில் பேஸ்புக் பார்த்தப்படியே பணம் சம்பாதிக்கலாம் !!

சூப்பர் வாய்ப்பு.. செல்போனில் பேஸ்புக் பார்த்தப்படியே பணம் சம்பாதிக்கலாம் !!

Update: 2022-02-24 10:00 GMT

பேஸ்புக் தளத்தை உலகம் முழுவதும் பல கோடி மக்கள் பயன்படுத்துகின்றனர். அதேபோல், பேஸ்புக் செயலியில் ரீல்ஸ் வகை வீடியோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் ரீமிக்ஸ், டிராஃப்ட், வீடியோ கிளிப்பிங் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக ரீமிக்ஸ் அம்சத்தின் மூலம் பயனர்கள் புதிய ரீல்ஸ் வீடியோக்களை உருவாக்க முடியும் என்று கூறப்படுகிறது. பின்பு ஏற்கனவே பகிரப்பட்டிருக்கும் ரீல்ஸ் வீடியோக்களையும் எடிட் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் தளத்தில் 60 நொடிகளுக்கு ரீல் வீடியோக்களை உருவாக்கும் வகையில் இந்த சேவை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் பேஸ்புக்கில் ஸ்டோரிஸ், நியூஸ் ஃபீட், வாட்ச் போன்ற இடங்களில் இந்த ரீல்ஸ் சேவை காண கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், பேஸ்புக் ரீல் வீடியோவை உருவாக்கும் பயனர்களுக்கு மானிடைசேஷன் அம்சத்தையும் வழங்கியுள்ளது. எனவே இதன்மூலம் ரீல்ஸ் வீடியோ உருவாக்குபவர்கள் வருமானமும் பெறமுடியும். அதேபோல் ரீல்ஸ் மூலம் பல்வேறு வகையில் விளம்பரம் செய்யும் செயல்பாட்டையும் பேஸ்புக் சோதனை செய்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது, ரீல்ஸ் சேவையை பேஸபுக் அறிமுகம் செய்தவதற்கு மிக முக்கியமான காரணம் என்னவென்றால் அதன் தினசரி பயனர்கள் சமீபத்தில் குறைந்ததே என கூறப்படுகிறது. மேலும் பல நிறுவனங்கள் இதுபோன்று வந்துள்ளதால் போட்டிகள் அதிகமானதாக கருதப்படுகிறது. எனவே பேஸ்புக் தளத்தில் இப்போது அறிமுகம் செய்யப்பட்ட சேவை மூலம் இழந்த பயனர்களை மீண்டும் பெறலாம் என மெட்டா நிறுவனம் நம்புகிறது.

newstm.in

Similar News