வயதான தம்பதியிடம் சொத்தை அபகரித்த துணை நடிகை!!

வயதான தம்பதியிடம் சொத்தை அபகரித்த துணை நடிகை!!

Update: 2022-06-02 08:22 GMT

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள தங்கள் இடத்தை துணை நடிகை ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக வயதான தம்பதியினர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

மணி (71), கஸ்தூரி(70) என்ற  வயதான தம்பதியினர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில், கடந்த 1978ஆம் ஆண்டு மேற்கு மாம்பலத்தில் சுமார் 3,000 சதுர அடியில்  சொந்தமாக வீடு கட்டி வசித்து வருவதாகவும், வாழ்வாதாரத்திற்காக குடியிருப்பில் வாடகைக்கு விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

அப்போது ருக்மணி என்ற துணை நடிகை அறிமுகமானதாகவும், அவர் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டதால், அவருடனான பழக்கத்தை நிறுத்தியதாக  குறிப்பிட்டிருந்தனர். இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு மணி தான் தனது கணவர் என கூறி கொண்டு ரவுடிகளுடன் வீட்டிற்குள் ருக்மணி நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 50 லட்ச ரூபாய் பணம் தரவேண்டும் எனவும் இல்லையென்றால் பொய் வழக்கில் சிறையில் தள்ளி விடுவோம் என மிரட்டியதாகவும் இதற்கு அசோக்நகர் உதவி ஆணையராக இருந்த வின்செண்ட் ஜெயராஜ் மற்றும் ஆய்வாளர் சூரிய லிங்கம் உடந்தையாக செயல்பட்டு சொத்தை அபகரிக்க உதவியதாகவும்  குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில் தாங்கள் வசித்து வரும் குடியிருப்பு 60 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்பதாலும், இடியும் தருவாயில் இருக்கின்ற காரணத்தினால், இடிப்பதற்காக சென்னை மாநகராட்சி கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

துணை நடிகை ரவுடிகள் மற்றும் காவல்துறை உதவியோடு சொத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாது, சட்ட விரோத செயல்களில் வீட்டிற்குள்ளேயே ஈடுபட்டு வருகிறார். மேலும் சென்னை மாநகராட்சி கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டதால் வேறுவழியின்றி வாழ்வாதாரத்தை இழந்து வாடகை வீட்டில் சென்று தங்கியுள்ளதாகவும் புகார் மனுவில் கூறியுள்ளனர்.

சென்னை மாநகராட்சியின் உத்தரவின் பேரில் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட்டுள்ளதுஇருப்பினும் வழக்குப் பதிவு செய்யப்பட்டாலும் துணை நடிகை மற்றும் கூட்டாளிகள் தொடர்ந்து மிரட்டிக்கொண்டு வெளியே செல்லாமல்  உள்ளனர்காவல்துறை ஆய்வாளர் சுப்பிரமணி உதவியுடன் தொடர்ந்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் 10 லட்சம் ரூபாய் லஞ்சமாக தர வேண்டும் என பேரம் பேசி வருகின்றனர். ஏற்கனவே, 15 லட்சம் ரூபாய் அளவில் கொடுத்த பிறகும் தொடர்ந்து ஆக்கிரமிப்பை கைவிடாமல் மிரட்டி வருகின்றனர்எனவே ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ள துணை நடிகை உள்ளிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து சொத்துக்களை மீட்டு தர வேண்டும் என மனுவில் கூறியுள்ளனர்.

newstm.in

Similar News