பெண்ணை சரமாரியாக அடித்த சுவிக்கி ஊழியர்!! VIDEO

பெண்ணை சரமாரியாக அடித்த சுவிக்கி ஊழியர்!! VIDEO

Update: 2022-04-02 09:11 GMT

காதலர்களுக்குள் ஏற்பட்ட மோதலை தடுக்க வந்த உணவு டெலிவரி செய்யும் நபர் இளம்பெண்ணை அடித்து தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் பகுதியில் பெண் ஒருவர் அவரது காதலனை சாலையில் வைத்து அடித்து தாக்கினார். அப்போது, அவ்வழியே வந்த வாகன ஓட்டிகள் பலர் சண்டையை வேடிக்கை பார்த்தபடி சென்றனர்.

அப்போது உணவு டெலிவரி செய்யும் நபர் ஒருவர் இளம்பெண்ணை சமாதானம் செய்ய முயன்றுள்ளார். ஆனால், அந்த பெண் அந்த இளைஞரையும் தகாத வார்த்தைகளில் திட்டவே, கடுப்பான டெலிவரி நபர் அந்த பெண்ணை சரமாரியாக தாக்கினார்.

காதலியிடம் அடி வாங்கிய காதலன் பொறுமையாக இருந்த நிலையில், சமாதானம் செய்ய வந்த இளைஞரை வாய்க்கு வந்தபடி திட்டிவிட்டு அடி வாங்கிய பெண் நிலைகுலைந்து போனார். சம்பவம் குறித்து போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இளம்பெண் தாக்கப்படும் சம்பவத்தின் வீடியோ சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது.


newstm.in

Similar News