இல்லத்தரசிகளுக்கு இனிப்பான செய்தி.. சரிந்தது தங்கம் விலை.. இன்றே வாங்கிடுங்க..!
இல்லத்தரசிகளுக்கு இனிப்பான செய்தி.. சரிந்தது தங்கம் விலை.. இன்றே வாங்கிடுங்க..!
சென்னையில் இன்று (13-ம் தேதி) ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,764 ஆகக் குறைந்துள்ளது. நேற்று (12-ம் தேதி) இதன் விலை 4,823 ரூபாயாக இருந்தது.
அதேபோல, நேற்று 38,584 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 472 ரூபாய் குறைந்து 38,112 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தூய தங்கத்தின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. நேற்று 5,222 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தூய தங்கம் இன்று 5,163 ரூபாயாக குறைந்துள்ளது.
அதேபோல, நேற்று 41,776 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் தூய தங்கம் 472 ரூபாய் குறைந்து 41,304 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
மும்பையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,698 ஆகவும், பெங்களூருவில் ரூ.4,698 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.4,698 ஆகவும், கேரளாவில் ரூ.4,670 ஆகவும், டெல்லியில் ரூ.4,698 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.4,698 ஆகவும், ஓசூரில் ரூ.4,813 ஆகவும், புதுச்சேரியில் ரூ.4,806 ஆகவும் உள்ளது.
வெள்ளி விலையும் பெரிய அளவில் குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று ரூ.64.60 ஆக இருந்தது. இன்று அது ரூ.63.40 ஆக குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 63,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.