இல்லத்தரசிகளுக்கு இனிப்பான செய்தி.. குறைந்தது எண்ணெய் விலை..!
இல்லத்தரசிகளுக்கு இனிப்பான செய்தி.. குறைந்தது எண்ணெய் விலை..!
சர்வதேச அளவில் சமையல் எண்ணெய் விலை குறைந்ததையொட்டி, இந்தியாவிலும் பாமாயில், சூரியகாந்தி, சோயா எண்ணெய்யின் விலை குறைந்துள்ளது.
அதன்படி, பாமாயில் விலை லிட்டருக்கு 8 ரூபாயும், சூரியகாந்தி எண்ணெய் விலை லிட்டருக்கு 15 ரூபாயும், சோயா எண்ணெய் விலை லிட்டருக்கு 5 ரூபாயும் குறைந்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் சர்வதேச அளவில் சமையல் எண்ணெய் விலை அதிகரிக்கத் தொடங்கியது.
இந்தியா அதன் பாமாயில் தேவையில் 45 சதவீதத்தை இந்தோனேஷியாவில் இருந்து இறக்குமதி செய்து வந்தது. கடந்த ஏப்ரல் மாதம், சர்வதேச அளவில் சமையல் எண்ணெய் விலை உயர்ந்தது.
இதை அடுத்து, இந்தோனேஷியா பாமாயில் ஏற்றுமதிக்கு தடை விதித்தது. இதனால், சமையல் எண்ணெய் விலை மேலும் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.