டி20 உலகக் கோப்பை.. பங்கேற்கும் 16 அணிகள் இறுதியானது !!

டி20 உலகக் கோப்பை.. பங்கேற்கும் 16 அணிகள் இறுதியானது !!;

Update: 2022-07-17 14:00 GMT

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு அக்டோபா் - நவம்பரில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா நடைபெற வுள்ளது. இந்தாண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் 16 அணிகள் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி  நான்கு அணிகள் தேர்வுக்கு தகுதி சுற்று போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன.

இந்த நிலையில் தகுதி சுற்று போட்டிகள் முடிவடைந்து டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் விளையாட இருக்கும் 16 அணிகள் இறுதியாகியது. குவாலிஃபயா் ‘பி’ பிரிவு அரையிறுதிகளில் நெதா்லாந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அமெரிக்காவையும், ஜிம்பாப்வே 27 ரன்கள் வித்தியாசத்தில் பப்புவா நியு கினியையும் வீழ்த்தி கடைசி இரு அணிகளாக தகுதிபெற்றன.

அணிகள் விவரம்:

ஆஸ்திரேலியா (நடப்புச் சாம்பியன்); ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, நமீபியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், ஸ்காட்லாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் (2021 போட்டியின் டாப் 11 அணிகள்).

அயா்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் (உலக குவாலிஃபயா் ‘ஏ’); நெதா்லாந்து, ஜிம்பாப்வே (உலக குவாலிஃபயா் ‘பி’).

newstm.in 

Tags:    

Similar News