தொடங்கியது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!!
தொடங்கியது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!!
தமிழக அரசில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 7,301 இடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு தமிழகம் முழுவதும் தொடங்கியது.
கட்டாய தமிழ் மொழி தகுதி & மதிப்பீட்டுத் தேர்வு, பொது அறிவு, திறனறி பகுதி என்று மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. நண்பகல் 12.30 மணிக்கு தேர்வு முடியும்.
மாநிலம் முழுவதும் 7,689 மையங்களில் நடைபெறும் தேர்வை 22,02,942 பேர் எழுத உள்ளதாக டிஎன்பிஎஸ்சி முன்பே அறிவித்திருந்தது. ஆனால் எத்தனை பேர் வந்தனர் என்பது குறித்த விவரம் தேர்வு முடிந்த பிறகு தெரியவரும்.
முறைகேடுகளைத் தவிர்க்க 1,10,150 தேர்வறை கண்காணிப்பாளர்கள், 7,689 கண்காணிப்பு அலுவலர்கள், 1,932 நடமாடும் கண்காணிப்பு படைகள், 534 பறக்கும் படையினர், 7,689 ஒளிப்பதிவாளர்கள், 7,689 சிசிடிவி ஆபரேட்டர்கள் தேர்வுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
newstm.in