டிவி ரேட்டிங் மேலும் சரிவு.. ஐபிஎல் பார்வையாளர்கள் எண்ணிக்கை மீண்டும் குறைந்தது !!

டிவி ரேட்டிங் மேலும் சரிவு.. ஐபிஎல் பார்வையாளர்கள் எண்ணிக்கை மீண்டும் குறைந்தது !!

Update: 2022-04-18 17:54 GMT

இந்தாண்டு ஐபிஎல் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் இருந்து ரசிகர்கள் இப்போட்டியை கண்டுரசித்து வருகின்றனர். இதனால், உலகில் அதிக டெலிவி‌ஷன் பார்வையாளர்களை கொண்ட போட்டிகளில் ஒன்றாக ஐபிஎல் தொடர் உள்ளது. 

இந்தாண்டு லக்னோ, குஜராத் ஆகிய புதிய அணிகள் உள்பட 10 அணிகள் விளையாடி வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக மும்பையில் உள்ள வான்கடே, பிராபோர்ன், டி.ஒய்.பட்டீல் மற்றும் புனே ஆகிய 4 மைதானங்களில் மட்டும் போட்டி நடைபெற்று வருகிறது.

நேற்றுடன் 29 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு டெலிவி‌ஷன் ஐபிஎல் பார்வையளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. முதல் வாரத்தில் டி.வி.ரேட்டிங்கில் சரிவு இருந்தது. முதல் 8 போட்டிகளில் டி.வி. ரேட்டிங் 2.52 ஆக இருந்தது. கடந்த ஆண்டு முதல் 8 போட்டிகளில் டெலிவி‌ஷன் ரேட்டிங் 3.75 ஆக இருந்தது.

இதே போல் 2வது வாரத்திலும் பார்வையாளர்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் வாரத்தில் நடந்த 8 போட்டிகளிலும் டி.வி. ரேட்டிங் குறைந்து வருகிறது. 15 வயது முதல் 21 வயது வரை உள்ளவர்களின் ரேட்டிங் 1.98 ஆக உள்ளது. இதுவே கடந்த ஆண்டு இது 3.31 ஆக இருந்தது. 22 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்களின் ரேட்டிங் 2.43 ஆகவும், 31 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்களின் ரேட்டிங் 2.34 ஆகவும் உள்ளது. கடந்த ஆண்டு இது 3.68 ஆக இருந்தது.

சோர்வு, புதிய அணிகள் ஆகியவைகளின் காரணமாக பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்ததாக கூறப்படுகிறது. எனினும் கொரோனா தாக்கத்தால் மக்கள் வேலையில் ஆர்வம் காட்டுவதாகவும், வருவாயை பெருக்க மும்முரமாக இருப்பதாலும் பார்வையாளர்கள் குறைவுக்கு ஒரு காரணமாக கருதப்படுகிறது.  

newstm.in

Tags:    

Similar News