தாம்பரம்- நாகர்கோவில் ரயில் ‘சூப்பர்- பாஸ்ட்’ ரயிலாக மாற்றம் !!
தாம்பரம்- நாகர்கோவில் ரயில் ‘சூப்பர்- பாஸ்ட்’ ரயிலாக மாற்றம் !!
தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் ‘சூப்பர் பாஸ்ட்’ ரயிலாக மாற்றப்பட்டுள்ளது.
சென்னை தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு 13 மணி 50 நிமிடங்களில் சென்றடையும் வகையில் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் 20691 என்ற புதிய எண்ணுடன் தாம்பரத்தில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் பகல் 12.50 மணிக்கு நாகர்கோவிலுக்கு சென்றடையும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 14ஆம் தேதி முதல் சூப்பர் பாஸ்ட் ரயிலாக மாற்றப்பட்டு இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவிலில் இருந்து 20692 என்ற புதிய எண்ணுடன் மாலை 3.50 மணிக்கு இந்த ரயில் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.40 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
திருப்பதி- புதுச்சேரி மெமு விரைவு ரயில் உள்பட 4 முன்பதிவு இல்லாத ரயில்களை, வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி திருப்பதியில் இருந்து நாள்தோறும் அதிகாலை 4.20 மணிக்கு முன்பதிவு இல்லாத மெமு விரைவு ரயில் (16111) புறப்பட்டு, அதே நாள் பிற்பகல் 12.50 மணிக்கு புதுச்சேரியை அடையும்.
மறுமார்க்கமாக, புதுச்சேரியில் இருந்து நாள்தோறும் பிற்பகல் 2.55 மணிக்கு முன்பதிவில்லாத மெமு விரைவு ரயில் (16112) புறப்பட்டு, அதே நாள் இரவு 11 மணிக்கு திருப்பதியை அடையும்.
இதுதவிர, சூலூர் பேட்டை- நெல்லூர் முன்பதிவில்லாத மெமு விரைவு ரயில் (தினசரி), சென்னை சென்ட்ரல்- சூலூர் பேட்டை முன்பதிவில்லாத மெமு விரைவு ரயில் (தினசரி), திருவனந்தபுரம்- நாகர்கோவில் முன்பதிவில்லாத விரைவு ரயில் (தினசரி) ஆகிய ரயில்களும் இயக்கப்பட உள்ளன.
newstm.in