தாம்பரம் மேயரானார் கல் உடைக்கும் தொழிலாளியின் மகள்!!

தாம்பரம் மேயரானார் கல் உடைக்கும் தொழிலாளியின் மகள்!!

Update: 2022-03-05 08:14 GMT

தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 70 வார்டுகளாக பிரிக்கப்பட்டு முதல்முறையாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்தித்ததுஅதில் திமுக 48, அதிமுக 8, சுயேச்சை 7, காங்கிரஸ் 2, விசிக, மதிமுக, சிபிஎம், மமக, தமாக தலா ஒரு இடங்களிலும் வென்றன. தாம்பரம் மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் பதவியை திமுகவே கைப்பற்றியது.

தாம்பரம் மாநகராட்சி மேயர் பதவி ஆதிதிராவிடர் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் தாம்பரம் மாநகராட்சி 32ஆவது வார்டில் போட்டியிட்ட வசந்தகுமாரி என்பவர் தாம்பரம் மாநகராட்சி மேயராக திமுக தலைமைக் கழகம் அறிவித்தது.

அதேபோல் துணை மேயராக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெகத்ரட்சகனின் உறவினரான ஜி.காமராஜ் என்பவர் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் மேயர் வேட்பாளர்  வசந்தகுமாரி இருசக்கர வாகனத்தில் பேரணியாக தாம்பரம் மாநகராட்சி அலுவலகம் வந்தார். அவரது தந்தை கல் உடைக்கும் தொழிலாளி.

வசந்தகுமாரிக்கு மாநகராட்சி ஆணையர் மா.இளங்கோவன் பதவி பிரமாணம் செய்து சிவப்பு அங்கி மற்றும் செங்கோலை வழங்கினர். அதனைத் தொடர்ந்து தாம்பரம் மாநகராட்சிகளில் உள்ள 70 வார்டுகளிலும் எல்இடி விளக்குகள் பராமரிக்கவும், புதிதாக அமைக்கவும் கோப்பில் முதல் கையெழுத்து போட்டார்.

துணை மேயருக்கான தேர்தலில், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனின் உறவினரும் 30வது வார்டு மாமன்ற உறுப்பினருமான காமராஜ் என்பவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

newstm.in

Similar News