#BREAKING :- தமிழ்நாடு பட்ஜெட் 2022 - 2023 - முழு விவரம் ஒரு பார்வை..!!
#BREAKING :- தமிழ்நாடு பட்ஜெட் 2022 - 2023 - முழு விவரம் ஒரு பார்வை..!!
2022-23 நிதி ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 2021-22 நிதி ஆண்டுக்கான திருத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த ஆக.13-ம் தேதி தாக்கல் செய்தார். ‘காகிதம் இல்லா சட்டப்பேரவை’ என்ற திட்டத்தின்படி, தமிழக வரலாற்றில் முதல்முறையாக காகிதவடிவில் இல்லாமல் மின்னணு வடிவில் (‘இ-பட்ஜெட்’) தாக்கல்செய்தார். முதல்முறையாக வேளாண் துறைக்கென தனி பட்ஜெட்டை ஆக.14-ம் தேதி துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து வாசித்து வருகிறார். இதில்,முக்கிய அம்சங்கள் உங்கள் பார்வைக்கு
- மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூ.2800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- ஆண்டுதோறும் 4 இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்படும். இதற்காக ரூ.5.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மருத்துவ மாணவர்கள் உள்நாட்டிலோ அல்லது வேறு வெளிநாடுகளிலோ கல்வியைத் தொடர தமிழக அரசு உதவி செய்யும்.
- பேருந்துகள் நவீன மயமாக்கல், மின் பேருந்துகள் கொள்முதல் செய்ய ரூ.5375 கோடி நிதி ஒதுக்கீடு
- கொரோனவால் இறந்த 327 முன்களப் பணியாளர் குடும்பங்களுக்கு ரூ.79.5 கோடி நிவாரணமும் ஒதுக்கீடு
- அரசு ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியப் பயன்களை வழங்க ரூ.19,000 கோடி ஒதுக்கீடு
- சமத்துவபுரங்களை பராமரிக்க ரூ.190 கோடி ஒதுக்கீடு
- அரசு பள்ளிகளில் 6 - 12 வரை படித்து உயர் கல்வியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்
- சிங்காரச் சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கப்படும்.
- அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பழமையான கோயில்களை புனரமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு..!!
- அரசு போக்குவரத்து கழகங்களுக்கு மானியமாக ரூ.1300 கோடி வழங்கப்படும்.
- மின்சார வாரியத்துக்கு ஏற்படும் இழப்பை அரசே ஏற்கும்; இதற்காக ரூ.13,108 கோடி நிதி ஒதுக்கீடு
- பழங்குடியினருக்கு 1000 புதிய வீடுகள்
- மீஞ்சூர் முதல் வண்டலூர் வரை 62 கிலோமீட்டர் தூரத்துக்கு இரு புறங்களிலும் பெருவழி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும்
- குறுவை சாகுபடியை சிறப்பாக மேற்கொள்வதற்காக 10 மாவட்டங்களில் 80 கோடி ரூபாய் செலவில் 4,966 கிலோ மீட்டர் கால்வாய் சீரமைக்கும்
- மாணவர்களுக்கான இலவச மிதிவண்டி திட்டத்திற்கு ரூ.162 கோடி நிதி ஒதுக்கீடு
- கீழ்பாக்கம் மனநல மருத்துவமனை உயர்தர மனநல சேவைகளை வழங்க ரூ.40 கோடி ஒதுக்கீடு
- இலவச பயண திட்டத்தால் பேருந்தில் பயணிக்கும் மகளிர் எண்ணிக்கை 61% ஆக உயர்வு
- மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்துக்கு ரூ.1,520 கோடி ஒதுக்கீடு..!!
- தாம்பரம், கும்பகோணம், காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாநகராட்சிகளை மேம்படுத்த தலா 10 கோடி என 60 கோடி ஒதுக்கீடு
- சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆறு வழிச் சாலையாக அகலப்படுத்த நடவடிக்கை
- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.17,901.73 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்
- சென்னைக்கு அருகில் ₹300 கோடியில் தாவரவியல் பூங்கா!
- கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்திற்காக ரூ.1000 கோடி ஒதுக்கீடு.
- வரையாடுகளை பாதுகாக்க ரூ,10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- பிரதமரின் வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3700 கோடி ஒதுக்கீடு.
- புதிதாக உருவாக்கப்பட்ட 6 மாவட்டங்களில் ரூ.36 கோடி செலவில் மாவட்ட மைய நூலகங்கள் அமைக்கப்படும்.
- முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்காக ரூ.1547 கோடி நிதி ஒதுக்கப்படும்.
- சத்துணவுத் திட்டத்திற்கு ரூ.1949 கோடி நிதி ஒதுக்கப்படும்.
- தமிழ்நாடு ஒலிம்பிக் தங்கப் பதக்கம் தேடல் திட்டத்திற்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்படும்.
- இளைஞர் விளையாட்டு நலனுக்காக ரூ.293 கோடி நிதி ஒதுக்கப்படும்.
- சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.750 கோடி ஒதுக்கீடு..
- மத்திய அரசின் வீடு கட்டும் திட்டமான அம்ருத் 2.0 திட்டத்திற்கு ரூ.2,030 கோடி ஒதுக்கீடு.
- சேத்துமடை, ஏலகிரியில் சூழல் சுற்றுலா திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
- வட சென்னையில் ரூ.10 கோடியில் விளையாட்டு வளாகம் அமைக்கப்படும். குத்துச்சண்டை, கூடைப்பந்து, கைப்பந்து, கபடி விளையாட்டரங்குகள் அமைக்கப்படும்.
- பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.36,895.89 கோடி ஒதுக்கப்படும்.
- 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்க ரூ.15 கோடி ஒதுக்கப்படும்.
- அரசுப் பள்ளிகளை நவீனமயமாக்க பேராசிரியர் அன்பழகன் திட்டம் செயல்படுத்தப்படும்.
- புதிதாக அரசுப் பள்ளிகளில் 18000 வகுப்பறைகள் கட்டப்படும். இதற்காக ரூ.13,000 கோடி ஒதுக்கப்படும்.
- வானிலை முன்னறிவிப்பு கட்டமைப்பை உருவாக்க ரூ.10 கோடி ஒதுக்கப்படுகிறது. இரண்டு ரேடார்கள், 100 தானியங்கி வானிலை மையங்கள் அமைக்கப்படும்.
- மாற்றுத் திறனாளிகள் நலவாரியத்திற்கு ரூ.8008 கோடி நிதி ஒதுக்கீடு.
- முதியோர் ஓய்வூதியம், மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களுக்கு ரூ.4816 கோடி ஒதுக்கப்படும்
- சமூக ஊடகங்களில் தவறான பிரச்சாரங்களைத் தடுக்க சமூக ஊடகங்கள் சிறப்பு மையம் அமைக்கப்படும்
- வள்ளலாரின் 200வது ஆண்டை ஒட்டி வள்ளலார் பல்லுயிர் பாதுகாப்புத் திட்டம் ரூ.20 கோடியில் செயல்படுத்தப்படும்.
- பழமையான தர்காக்கள், தேவாலயங்களை புனரமைக்க ரூ.12 கோடி ஒதுக்கப்படும்.
- தீயணைப்புத் துறைக்கு ரூ.496 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- நீர்நிலைகள் பாதுகாப்பு, அரசு நிலங்களை மீட்க ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- சுய உதவிக்குழுக்களுக்கு கடன், விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க ரூ.4130 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகைக்கடன் தள்ளுபடிக்காக ரூ.1000 கோடி ஒதுக்கப்படும்.
- முதற்கட்டமாக ரூ.190 கோடி செலவில் 149 சமத்துவபுரங்கள் சீரமைக்கப்படும்
- விழுப்புரம், ராமநாதபுரத்தில் புதிய அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
- தமிழகத்தில் உள்ள 64 அணைகளைப் புனரமைக்க ரூ.1064 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- நீர்வளத்துறைக்கு ரூ.7338.36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- வருவாய் பற்றாக்குறை கடந்த ஓராண்டில் ரூ.7 ஆயிரம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
- வரும் நிதியாண்டில் மாநில மொத்த உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறை 4.61%-ல் இருந்து 3.80 சதவீதமாகக் குறையும்.
- முதல்வரின் முகவரின் திட்டத்தின் கீழ் 10 லட்சத்துக்கு மேற்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
- கொற்கையில் ரூ.5 கோடியில் ஆழ்கடல் அகழாய்வு மேற்கொள்ளப்படும்.