தமிழக முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை: வெளியான மருத்துவமனை அறிக்கை..!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை: வெளியான மருத்துவமனை அறிக்கை..!!
தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு கடந்த ஜூலை 12-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனால் தன்னை தனிமைப்படுத்தி கொண்டதாக முதல்வர் அறிவித்திருந்தார்.அவர் ட்விட்டரில் வெளியிட்டிருந்த பதிவில், “இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்’ என அவர் குறிப்பிட்டிருந்தார்
ஜூலை 15, 16 தேதி கோவை செல்ல திட்டமிடப்பட்டிருந்தது, அதேபோல் அடுத்த வாரம் டெல்லி சென்று பிரதமருக்கு 'செஸ் ஒலிம்பியாட் 2022'க்கான அழைப்பிதழை முதல்வர் நேரில் கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவப் பரிசோதனைகாக காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காவிரி மருத்துவமனை வெளியிட்டத அறிக்கையில், கொரோனா சிகிச்சை கண்காணிப்புகளுக்காக மருத்துவர்களின் அறிவுரைப்படி முதல்வர் ஸ்டாலின் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் அவருக்கு சி.டி.ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.