தமிழக முதல்வர் ஒரு விளம்பரப் பிரியர்.. போட்டுத் தாக்கும் எடப்பாடியார்..!

தமிழக முதல்வர் ஒரு விளம்பரப் பிரியர்.. போட்டுத் தாக்கும் எடப்பாடியார்..!

Update: 2022-06-14 04:30 GMT

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

அப்போது அவர், நிலவாரப்பட்டி பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 50 அடி உயர கம்பத்தில் அதிமுக கொடியை ஏற்றிவைத்தார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது; “அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் திமுக ஆட்சியில் திறந்து வைக்கப்பட்டு வருகிறது.

எந்த ஒரு புதிய திட்டத்தையும் செயல்படுத்தாத ஒரே ஆட்சியாக திமுக ஆட்சி செயல்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் விளம்பரப் பிரியர். உடற்பயிற்சி செய்வது, டீக்கடையில் டீ குடிப்பது என விளம்பரம் செய்து வருகிறார். திமுக ஆட்சியில் எல்லாம் டூப்ளிகேட் தான், எதுவும் ஒரிஜினல் இல்லை. திமுக கட்சியும், ஆட்சியும் ஒரிஜினல் இல்லை.

மக்கள் மீது சுமைகள் இருக்கக்கூடாது என்பதற்காக சொத்துவரி அதிமுக ஆட்சியில் உயர்த்தவில்லை. தற்பொழுது இந்த ஆட்சியாளர்கள் வந்தவுடன் வரியை உயர்த்தி விட்டார்கள்.

தினந்தோறும் கொலை, கொள்ளை திருட்டு நடைபெற்று வருவதால் நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ முடியாத சூழ்நிலையை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

போதை பொருட்கள் அதிகம் விற்பனை செய்யும் மாநிலமாக தமிழகம் உள்ளது. சட்டம் ஒழுங்கும் முழுமையாக சீரழிந்துவிட்டது. காவல்துறையினர் தாக்கப்படுகிறார்கள். திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாத சூழல் உள்ளது.

தமிழகத்தில் எப்பொழுதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ, அப்பொழுது சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு விடும். மின்சாரம்தான் ஒரு நாட்டிற்கு வளர்ச்சிக்கு ஆதாரம்.

தற்போது திமுக ஆட்சியில் எப்பொழுது மின்சாரம் நிறுத்தப்படும் என்று தெரியாத நிலை உள்ளது. மின்சார கட்டணம் உயர்வு தமிழகத்தில் வரவுள்ளது” என்று பேசினார்.

Similar News