கச்சத்தீவு திருவிழாவுக்கு தமிழக பக்தர்களுக்கு அனுமதி! ஆனால்…!

கச்சத்தீவு திருவிழாவுக்கு தமிழக பக்தர்களுக்கு அனுமதி! ஆனால்…!

Update: 2022-02-22 06:30 GMT

கச்சத்தீவில் நடைபெறும் அந்தோணியார் அலய திருவிழாவில் தமிழக பக்தர்கள் 50 பேர் பங்கேற்க இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.

கச்சத்தீவில் உள்ள பிரசித்தி பெற்ற அந்தோணியார் ஆலய திருவிழா மார்ச் 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் இரு நாட்டினரும் கலந்து கொள்வார்கள்.

இலங்கைக்கு கச்சத்தீவு கொடுக்கப்பட்டாலும் புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் கலந்து கொள்ள தமிழக மீனவர்கள் எந்தவித ஆவணங்களும் கொண்டு செல்ல தேவையில்லை.

ஆனால், கொரோனா பரவலை காரணம் காட்டி தமிழக மீனவர்களுக்கு அனுமதி கிடையாது என்று இலங்கை முதலில் கூறியதுகடந்த ஆண்டும் கொரோனா பரவலால் இந்திய பக்தர்கள் திருவிழாவில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில் இந்த ஆண்டும் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி கிடையாது என்று அந்நாட்டில் இருந்து வெளியான  தகவல், மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

இந்நிலையில், இந்த திருவிழாவில் பங்கேற்க இந்தியா, இலங்கயைச் சேர்ந்த 50 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. பக்தர்கள் இன்றி திருவிழா நடைபெறும் என்று  இலங்கை அரசு தெரிவித்துவந்த நிலையில், தற்போது இரு நாட்டு மக்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Similar News