தமிழக அரசு அதிரடி.. 3 ஆண்டுகளாக ஒரே இடம்.. 235 உதவி பொறியாளர்கள் தூக்கியடிப்பு..!

தமிழக அரசு அதிரடி.. 3 ஆண்டுகளாக ஒரே இடம்.. 235 உதவி பொறியாளர்கள் தூக்கியடிப்பு..!

Update: 2022-06-18 13:45 GMT

தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அனைத்து அரசுத் துறைகளிலும் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது.

இதில், அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு, பணியிட மாற்றம், புதிய அதிகாரிகளை நியமனம் செய்வது உள்ளிட்ட அதிரடியான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், இந்த மாத தொடக்கத்தில் பொதுப்பணி மற்றும் நீர்வளத்துறையில் பொறியாளர்களை பணியிட மாற்றம் செய்தும், கூடுதல் பொறுப்பு வழங்கியும் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், தற்போது தமிழக நீர்வளத்துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணியாற்றி வந்த 235 உதவி பொறியாளர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Similar News