இனி வீடு தேடி வரும் குடும்ப அட்டை - தமிழக அரசு அறிவிப்பு..!!

இனி வீடு தேடி வரும் குடும்ப அட்டை - தமிழக அரசு அறிவிப்பு..!!

Update: 2022-06-25 05:30 GMT

தமிழகத்தில் புதிதாக மின்னணு குடும்ப அட்டை (ஸ்மார்ட் ரேஷன்கார்டு) பெறவோ அல்லது ஏற்கனவே உள்ள மின்னணு குடும்ப அட்டை தொலைந்தாலோ இணைய வழியில் முதலில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அந்த தகவலை சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் (டி.எஸ்.ஓ) அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலரிடம் நேரில் தெரிவிக்க வேண்டும்.அடுத்து 20 அல்லது 30 தினங்களில் மொபைல் எண்ணுக்கு குறுந்தகவல் வந்தவுடன் மீண்டும் வட்ட வழங்கல் அலுவலகம் சென்று ஸ்மார்ட் ரேஷன்கார்டு பெற்றுக் கொள்ளலாம்.இது தற்போது உள்ள நடைமுறை.

ஆனால், புதிய மின்னணு குடும்ப அட்டைகள் மற்றும் நகல் மின்னணு குடும்ப அட்டைகளை பயனாளிகளின் விருப்பத்தின் பேரில் தபால் வழியாக இருப்பிடத்திற்கு அனுப்பி வைக்கும் வகையில், தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், இத்திட்டத்திற்கான கட்டணம் மற்றும் வழிமுறைகள் குறித்து கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் குடும்ப அட்டை நகலை தபாலில் பெற விரும்புவோருக்கு, இணையவழியில் விண்ணப்பிக்கும்போதே, இணையவழி அட்டை கட்டணம் ரூ.20 மற்றும் தபால் கட்டணம் ரூ.25 என ரூ.45 கட்டணமாக வசூலிக்கப்படும். 

தபால் மூலமாக புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை பெற விரும்பாதவா்களுக்கு தற்போதைய நடைமுறைப்படி குடும்ப அட்டை தொடா்ந்து வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News