தமிழ் கலாசாரம் உலக அளவில் புகழ்பெற்றது : பிரதமர் மோடி பெருமிதம்!!

தமிழ் கலாசாரம் உலக அளவில் புகழ்பெற்றது : பிரதமர் மோடி பெருமிதம்!!

Update: 2022-05-26 20:46 GMT

ஒரு நாள் பயணமாக பிரதமர் மோடி சென்னை வந்தார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற  நிகழ்ச்சியில், தேசிய நெடுஞ்சாலை துறையின் புதிய திட்டங்கள், ரயில்வே துறையின் புதிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.

பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த பிறகு பேசிய பிரதமர், தமிழ்நாட்டிற்கு வருவது என்பது, எப்போதுமே மிக அருமையாக இருக்கும் ஒன்று என்று கூறினார். இந்த மாநிலத்தின் மக்கள், கலாசாரம், மொழி என அனைத்துமே மிகச் சிறப்பானவை என்றார்.

ஒவ்வொரு துறையிலும் தமிழ்நாட்டை சார்ந்த யாராவது ஒருவர், தலைசிறந்தவராக விளக்குகின்றனர். அண்மையில் இந்திய செவித்திறன் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் குழுவினருக்கு என் இல்லத்தில் வரவேற்பு அளித்தேன்.

இதுவரை நடந்த போட்டியில் இதுதான் இந்தியாவின் ஆகச்சிறந்த செயல்பாடு என்பதை நீங்கள் அறிவீர்கள். நாம் வென்ற 16 பதக்கங்களில் தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்கள் 6 பேருக்கு பங்கு இருந்தது.

தமிழ்மொழி நிலையானது, தமிழ் கலாசாரம் உலகளாவியளானது. சென்னை முதல் கனடா வரை, மதுரை முதல் மலேசியா வரை, நாமக்கல் முதல் நியூயார்க் வரை, சேலம் முதல் தென் ஆப்பிரிக்கா வரை பொங்கல் மற்றும் புத்தாண்டு காலங்கள் மிகுந்த சிறப்பானவை என்றார்.

newstm.in

Similar News