+2 மாணவனின் உயிரைப் பறித்த தந்தூரி சிக்கன்!!
+2 மாணவனின் உயிரைப் பறித்த தந்தூரி சிக்கன்!!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுனை சேர்ந்த ஆப்பிள் ஸ்கூல் உரிமையாளர் கணேஷ் (எ) ஆப்பிள் கணேஷ் என்பவரின் மகன் திருமுருகன் 12ஆம் வகுப்பு தேர்வு முடித்து விட்டு கடந்த 24ஆம் தேதி நண்பர்களுடன் 5 ஸ்டார் எலைட் என்ற ஹோட்டலில் நண்பர்களுடன் தந்தூரி சிக்கன், பிரைட் ரைஸ் சாப்பிட்டார்.
அன்று இரவு முழுவதும் வயிற்று வலி, வாந்தியால் அவர் அவதிப்பட்டதை அடுத்து மறுநாள் காலை வீட்டின் அருகே உள்ள தனியார் கிளினிக்கில் சிகிச்சை பெற்றார். ஆனால் வயிற்று வலி, வாந்தி தொடர்ந்து இருந்ததால் சோர்வடைந்தார்.
இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி காலை திடீரென வயிற்று வலி, வயிற்று போக்கு அதிகளவில் ஏற்பட்டது. உடனடியாக ஸ்கேன் எடுக்க வேண்டும் என தனியார் கிளினிக்கின் மருத்துவர் மம்தா என்பவர் பரிந்துரை செய்தார்.
ஆரணியில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டரில் ஸ்கேன் செய்த போது வயிற்றில் உணவு விஷமானது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் வேலூர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே திருமுருகன் உயிரழந்தார்.
இதனையடுத்து மாணவனின் தந்தை கணேஷ் தனது மகன் மரணத்திற்கு காரணமான 5 ஸ்டார் எலைட் என்ற ஹோட்டல் உரிமையாளர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மகன் இறந்த நாளில் எந்த முடிவும் எடுக்காத மனநிலையில் இருந்ததாகவும் அதனால் தற்போது புகார் அளித்துள்ளேன்’ என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
newstm.in