தஞ்சை பெரியகோவில் தேரோட்டம்.. உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!

தஞ்சை பெரியகோவில் தேரோட்டம்.. உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!

Update: 2022-04-02 20:25 GMT

கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தஞ்சை பெரிய கோவில் சித்திரை தேரோட்டம் நடைபெறவில்லை.

இந்நிலையில், தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதை அடுத்து அனைத்து கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா கடந்த 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 13-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

இதையொட்டி,  தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வரும் 13-ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில், அடுத்த மாதம் 14-ம் தேதி அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Similar News