தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு – தமிழக அரசு மேல்முறையீடு!!

தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு – தமிழக அரசு மேல்முறையீடு!!

Update: 2022-02-04 06:30 GMT

தஞ்சை மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

தஞ்சை அருகே உள்ள கிறிஸ்தவ பள்ளியில் படித்து வந்த அரியலூரைச் சேர்ந்த மாணவி கடந்த சில நாள்களுக்கு முன்பு தற்கொலை செய்துக்கொண்டார். மாணவி விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில் மதம் மாறுமாறு கட்டாயப்படுத்தியால் தற்கொலை செய்துக்கொண்டதாக பெற்றோர் குற்றஞ்சாட்டினர்.

இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் எனக் கூறி மாணவியின் தந்தை முருகானந்தம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார்இதனையடுத்து வழக்கு சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டனர்.

இதனிடையே மாணவியின் தந்தை முருகானந்தம் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தனது மகள் மரணம் தொடர்பாக யாரேனும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தால், தனது தரப்பையும் கேட்ட பிறகே எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டும் எனக் கோரி இருந்தார்.

இந்நிலையில் தஞ்சை மாணவி வழக்கை சிபிஐ விசாரிக்க தடை விதிக்கக்கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு மீதான விசாரணை விரைவில் வர உள்ளது.

newstm.in

Similar News