3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்.. அரசு அதிரடி உத்தரவு..!

3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்.. அரசு அதிரடி உத்தரவு..!

Update: 2022-07-07 16:53 GMT

தமிழகத்தில், காலியாக உள்ள ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்றத் தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவி இடங்களை நிரப்புவதற்கான இடைத்தேர்தல் வரும் சனிக்கிழமை (9-ம் தேதி) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை 12-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த நிலையில், இன்று (7-ம் தேதி) காலை 10 மணி முதல் நாளை மறுநாள் (9-ம் தேதி) நள்ளிரவு 12 மணி வரையும், வாக்கு எண்ணிக்கை நாளான 12-ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறும் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களை சுற்றி சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்.

மேலும், டாஸ்மாக் மூலம் நடத்தப்படும் சில்லறை மதுபான கடைகளின் மேற்பார்வையாளர்கள், மதுபான கடைகளும், மது அருந்தும் இடங்களும் திறக்காமல் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

இதனை மீறி எவரேனும் கடைகள் மற்றும் மது அருந்தும் கூடங்களில் மதுபானங்கள் விற்றாலோ, திறந்து வைத்திருந்தாலோ கடை மேற்பார்வையாளர் பெயரிலும், பார் உரிமையாளர்கள் பெயரிலும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

Similar News