பெட்ரோல், டீசல் மீதான வரிகள் ரத்து!?

பெட்ரோல், டீசல் மீதான வரிகள் ரத்து!?

Update: 2022-06-24 08:29 GMT

அமெரிக்காவில் பெட்ரோல், டீசல் மீதான வரிகளை 3 மாதங்களுக்கு ரத்து செய்யும் திட்டத்தினை அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் முன்மொழிந்துள்ளார்.

ரஷ்யா - உக்ரைன் போர் உலக அளவில் பெரும் பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் நாளுக்கு நாள் உலக நாடுகளுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.

ஆனாலும் போர் முடிவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. இதனால் பொருளாதார நிலை உலக அளவில் நாளுக்கு நாள் மிக மோசமாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

போர் தாக்கம் உலக வல்லரசான அமெரிக்காவையே அசைத்து பார்த்துவிட்டது. உக்ரைன் போரின் விளைவால் அமெரிக்காவில் விலைவாசி உயர்வு 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 8.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.

 இதனை கட்டுப்படுத்த பெட்ரோல், டீசல் மீதான வரிகளை 3 மாதங்களுக்கு ரத்து செய்யும்படி அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஜோ பைடன் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் பெட்ரோல், டீசல் மீதான வரிகளை 3 மாதங்களுக்கு ரத்து செய்யும் திட்டத்தினை அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் முன்மொழிந்த பின் சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது.

newstm.in

Similar News