ஆசிரியர் தகுதித் தேர்வு: இன்று முதல் ஏப்ரல் 13 வரை.. தேர்வு வாரியம் அறிவிப்பு..!

ஆசிரியர் தகுதித் தேர்வு: இன்று முதல் ஏப்ரல் 13 வரை.. தேர்வு வாரியம் அறிவிப்பு..!

Update: 2022-03-14 11:49 GMT

தமிழகத்தில், காலியாக உள்ள 9,494 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கு, விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். மேலும் இதற்கு அதிகபட்ச வயது வரம்பு ஏதும் இல்லை. இதில் தாள்-I, தாள்-II என்ற இரு தாள்களுக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

இதில் தாள்-Iக்கு விண்ணப்பிக்க அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதுடன் 2 ஆண்டு ஆசிரியர் பயிற்சி படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும்.

தாள்-IIக்கு விண்ணப்பிக்க அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் இளநிலைப் பட்டம் பெற்று பி.எட் முடித்தவர்கள், முதுநிலைப் பட்டம் பெற்று பி.எட் படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் http://www.trb.tn.nic.in/ என்ற இணையதள முகவரிக்கு சென்று பதிவு செய்ய வேண்டும்.

இதில் விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 வசூலிக்கப்படுகிறது. அத்துடன் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.250 தேர்வுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இதற்கு, இன்று (மார்ச் 14-ம் தேதி) முதல் ஏப்ரல் 13-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற http://www.trb.tn.nic.in/TET_2022/07032022/Notification.pdf என்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.

Similar News