மாணவிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய ஆசிரியர் கைது!!

மாணவிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய ஆசிரியர் கைது!!

Update: 2022-04-12 08:27 GMT

விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மாணவிக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச மெசேஜ் அனுப்பியதாக அதே பள்ளியில் பணியாற்றும் வேதியியல் ஆசிரியரை போலீஸார் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

தங்கராஜ் என்பவர் அரசு உதவிபெறும் பள்ளியில் தற்காலிக வேதியியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் தன்னிடம் 12ஆம் வகுப்பில் பயிலும் மாணவிக்கு, வாட்ஸ் அப்பில் ஆபாசமான தகவல்களை அனுப்பி தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனவேதனை அடைந்த மாணவி தனது பெற்றோரிடம் வேதியியல் ஆசிரியர் குறித்து கூறினார். மாணவியின் பெற்றோர் இதுதொடர்பாக பள்ளி தலைமையாசிரியர் ராமசுப்பிரமணியனிடம் புகார் அளித்தனர்.

தலைமையாசிரியர் அளித்த புகாரின் பேரில், அனைத்து மகளிர் காவல்துறையினர் தங்கராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Similar News