‘பிட்’ அடித்ததை கண்டித்த ஆசிரியர்.. மாணவன் எடுத்த விபரீத முடிவு..!
‘பிட்’ அடித்ததை கண்டித்த ஆசிரியர்.. மாணவன் எடுத்த விபரீத முடிவு..!
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கணியூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் சோழமாதேவியைச் சேர்ந்த கலைச்செல்வன் என்ற மாணவன் 11-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது, பள்ளியில் ரிவிசன் தேர்வுகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த்த தேர்வில் மாணவன் கலைச்செல்வன் பிட் அடித்ததாக கூறப்படுகிறது. அதை கண்டுபிடித்த ஆசிரியர், அவரை மன்னித்து மீண்டும் தேர்வு எழுத அனுமதித்துள்ளார்.
அப்போது கலைச்செல்வன் இரண்டாவது முறையாக மீண்டும் பிட் அடித்துள்ளார். இதைப் பார்த்த ஆசிரியர், கலைச்செல்வனை உடனடியாக தலைமையாசிரியரிடம் அனுப்பியுள்ளார்.
தலைமை ஆசிரியர் மாணவனின் பெற்றோரை அழைத்து வர அறிவுறுத்தியுள்ளார். அதில் மனமுடைந்த மாணவன் பள்ளியின் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார்.
அலறல் சத்தம் கேட்டு ஆசிரியர்கள் ஓடிவந்து பார்த்தபோது, கலைச்செல்வன் ரத்த வெள்ளத்தில் படுகாயத்துடன் கிடந்துள்ளார். இதைத் தொடர்ந்து, ஆம்புலன்ஸ் மூலம் மாணவனை உடனடியாக உடுமலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த மாணவன் கலைச்செல்வன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த அங்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பள்ளி மாடியில் இருந்து குதித்து மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.