டீச்சர் கேட்டு போராட்டம்.. உறுதி அளித்த கலெக்டர்.. கைவிட்ட மாணவர்கள்..!

டீச்சர் கேட்டு போராட்டம்.. உறுதி அளித்த கலெக்டர்.. கைவிட்ட மாணவர்கள்..!

Update: 2022-02-02 19:00 GMT

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த நெகனூர் புதூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 56 மாணவர்கள், 54 மாணவிகள் என மொத்தம் 100 பேர் பயின்று வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியர் உட்பட 4 ஆசிரியர்கள் தற்போது பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்தப் பள்ளியில் பணியாற்றிய ஆங்கில ஆசிரியர் குமார் என்பவர் மாற்றப்பட்ட நிலையில், மாற்று ஆசிரியர் யாரும் பணியமர்த்தப்பட வில்லை. இதனால், கடந்த ஒரு வருடமாக ஆசிரியர் இல்லாததால் ஆங்கில பாடங்களை கற்பதில் மாணவர்கள் சிரமப்பட்டனர்.

இதன் காரணமாக, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைகளுடன் இணைந்து பள்ளி நுழைவாயிலை மூடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த மாவட்ட கல்வி அலுவலர் காளிதாஸ், வட்டாட்சியர் பழனி மற்றும் வளத்தி காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்ருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால், அதை ஏற்றுக் கொள்ளாத பெற்றோர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன், போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோருடன் தொலைபேசியில் பேசினார்.

அப்போது, அடுத்த 20 நாட்களில் இப்பள்ளிக்கு நிரந்தரமாக ஆங்கில ஆசிரியர் ஒருவரை பணியில் நியமிப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து பெற்றோர் போராட்டத்தை கைவிட்டு தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News