கண்ணீர் வரவழைக்கும் செய்தி..!! ரஷ்ய தாக்குதலில் தனது கையை இழந்து நிற்கும் 9 வயது உக்ரேனிய சிறுமி..
கண்ணீர் வரவழைக்கும் செய்தி..!! ரஷ்ய தாக்குதலில் தனது கையை இழந்து நிற்கும் 9 வயது உக்ரேனிய சிறுமி..
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. ரஷ்ய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் ரஷ்யாவிற்கு உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது.
இந்த நிலையில், சாஷா என்ற 9 வயது உக்ரேனிய சிறுமி, கடந்த வாரம் கடுமையான மோதலுக்கு மத்தியில் கீவ் புறநகரான ஹோஸ்டோமெல் நகரிலிருந்து அவரது தந்தை, தாய் மற்றும் சகோதரியுடன் காரில் தப்ப முயன்றுள்ளார்.
அப்போது அந்த காரை குறிவைத்து ரஷ்ய படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், சாஷாவின் தந்தை கொல்லப்பட்டுள்ளார். இதனையடுத்து, எப்படியோ தாய், சகோதரியுடன் சாஷா பதுங்கும் இடத்தில் தஞ்சமடைந்துள்ளார்.
தற்போது மருத்துவமனயைில் மீண்டு வரும் சாஷா நடந்தது குறித்து கூறியதாவது, ரஷ்யர்கள் எதற்காக என்னை சுட்டார்கள் என எனக்கு தெரியவில்லை.அதுஒரு விபத்து என்றும், அவர்கள் என்னை காயப்படுத்த நினைக்கவில்லை என நான் நினைத்தேன். எனது கையில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது.
எல்லாம் முடிந்து விட்டது என கருதினேன். பின் சுயநினைவை இழந்தேன். சிலர் என்னை பதுங்கும் இடத்திற்கு தூக்கிச் சென்றனர், அங்கு எனக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.பின்னர் சிலர் என்னை ஒரு டவலில் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் என சாஷா நடந்ததை விவரித்தார்.
சாஷாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கூறியதாவது, வெள்ளை கொடி காட்டிய படி பொதுமக்கள் சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
இர்பின் மருத்துவமனையில் வைத்து சாஷாவிற்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. காயத்தால் ரத்த ஓட்டம் நின்று சிறுமியின் கை பகுதி சிதைந்து வருவதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
உடனே உயிரை காப்பாற்ற சிறுமியின் வலது கையை மருத்துவர்கள் துண்டித்தனர். பின், சாஷா கீவ் நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் என மருத்துவர் தெரிவித்தார்.
உக்ரைன் மீதான ரஷ்யா படையெடுப்பால் கடுமையான காயமடைந்த மற்றும் பெற்றோர்களில் ஒருவரை இழந்த குழந்தைகளில் சாஷாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.