எங்களை மதம் மாறச் சொல்றாங்க.. ஆசிரியை மீது மாணவி புகார்..!

எங்களை மதம் மாறச் சொல்றாங்க.. ஆசிரியை மீது மாணவி புகார்..!

Update: 2022-04-13 15:25 GMT

கன்னியாகுமரி மாவட்டம் கண்ணாட்டுவிளை பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்து 300-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்தப் பள்ளியில் தையல் கலை ஆசிரியராக பணியாற்றும் ஆசிரியை தையல் வகுப்புக்கு வரும் இந்து மத மாணவிகளிடம் இந்து மத கடவுள்களை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

மேலும், மாணவிகளிடம் கிறிஸ்தவ மத பிரார்த்தனைகளை சொல்லி பிரார்த்தனை செய்ய வற்புறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் நேற்று,  தையல் வகுப்பிற்கு சென்ற மாணவிகளிடம் இதே நடவடிக்கையில் அந்த ஆசிரியை ஈடுபட்டதாக தெரிகிறது. இதையடுத்து மாணவிகள், தங்கள் பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளனர்.

மாணவிகளின் பெற்றோர், இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவித்து, அவர்களுடன் பள்ளிக்கு சென்று தலைமையாசிரியரிடம் புகார் அளித்தனர்.

தொடர்ந்து, போலீசார் விசாரணை நடத்தியதில், மாணவிகள் ஆசிரியையின் நடவடிக்கை குறித்த குற்றச்சாட்டை அடுக்கினர்.

இந்த நிலையில், தலைமை ஆசிரியர் முன் போலீசார் மாணவி ஒருவரிடம் விசாரணை நடத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி, ஆசிரியை மீது  நடவடிக்கை எடுக்க முதன்மை கல்வி அதிகாரிக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Similar News