கோவில் திருவிழாவில் பரபரப்பு… போலீஸ் மீது தாக்குதல்!!

கோவில் திருவிழாவில் பரபரப்பு… போலீஸ் மீது தாக்குதல்!!

Update: 2022-04-14 08:51 GMT

மதுரை உத்தப்புரத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் போலீஸார் மீது சிலர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எழுமலை அருகே உள்ள உத்தப்புரம் கிராமத்தில் தெற்குத் தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் மாரியம்மன் கோவில் திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், ஊர்வலம் வரும்போது சிலர் பீர் பாட்டிலை ரோட்டில் உடைத்ததாக கூறப்படுகிறது

இதனால் போலீசார் அவர்களை பிடிப்பதற்காக சென்றபோது, அவர்கள் போலீஸார் மீது தாக்குதல் நடத்தினர். இதில் ராமநாதபுரம் தனிப் பிரிவு காவலர் பாண்டிஉசிலம்பட்டி தாலுகா காவலர் சேகர் ஆகியோர் காயமடைந்தனர்.

அவர்களுக்கு உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதுமேலும் இந்த சம்பவத்தில் சில இருசக்கர வாகனங்கள் சேதம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

newstm.in

Similar News