அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் உள்பட 22 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பின்னர் அந்நபரும் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த வடு அடங்குவதற்குள் அடுத்த சம்பவம் நடந்துள்ளது  

அமெரிக்காவின் துல்சா நகரில் உள்ள புனித பிரான்சிஸ் மருத்துவமனை வளாகத்தில் நடாலி மருத்துவ கட்டடத்தில் மருத்துவ பணியாளர்கள் விறுவிறுப்பாக பணி செய்துக்கொண்டிருந்தனர். நோயாளிகள் சிகிச்சை பெற்றும், ஓய்விலும் இருந்து வந்தனர்.

இந்த நிலையில், மருத்துவமனைக்கு திடீரென புகுந்த மர்ம நபர் ஒருவர், தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியக துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதனால் அச்சமடைந்த மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகள் தாங்கள் இருந்த இடத்திலேயே பதுங்கிக்கொண்டனர்.

எனினும்  மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலியாகியுள்ளதாக மீட்புகுழுவினர் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, துப்பாக்கிச்சூடு குறித்து தகவல் அறிந்ததும் அதிரடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்றனர். அப்போது போலீசார் நடத்திய பதில் தாக்குதலில், துப்பாக்கிச் சூடு நடத்திய நபரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், தாக்குதல் நடத்தப்பட்ட கட்டடத்திற்குள் இருக்கும் நோயாளிகள் உள்பட அனைவரையும் வெளியேற்றும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். வளாகத்தின் வேறு பகுதியில் யாரேனும் கொல்லப்பட்டிருந்தால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

கடந்த வாரம் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ராப் தொடக்கப் பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் உள்பட 22 பேர் கொல்லப்பட்ட நிலையில், ஒரே வாரத்தில் மற்றொரு துப்பாக்கிச் சூடு நடந்திருப்பது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Tags: