பயங்கரம்.. வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று நகை கொள்ளை !!

பயங்கரம்.. வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று நகை கொள்ளை !!

Update: 2022-02-07 07:22 GMT

அனாதைமடம் அருகே உள்ள கவிமணி நகரை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற பேராசிரியர் பேபி சரோஜா(70) . இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். பேபி சரோஜா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவரை அவரது மகள்கள் அடிக்கடி வந்து பார்த்துவிட்டு செல்வார்கள்.

நேற்று மாலை 4.30 மணி அளவில் பேபி சரோஜா வீட்டில் தனியாக இருந்தார். அப்போது ஒரு இளைஞர் வீட்டிற்கு வந்துள்ளார். முன்புற கதவை பூட்டிய அந்த இளைஞர் கண் இமைக்கும் நேரத்தில் பேபி சரோஜா கழுத்தில் கிடந்த செயினை பறித்தான். பேபி சரோஜா கூச்சலிட்டவாறே கொள்ளையனுடன் போராடினார். ஆத்திரம் அடைந்த கொள்ளையன் அவரை பிடித்து தள்ளினான். இதில் மர சோபாவில் விழுந்த பேபி சரோஜா,தலையில் அடிப்பட்டு மயங்கினார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பத்தில் உள்ளவர்கள் வந்து கதவை தட்டியுள்ளனர். சுதாரித்துக்கொண்ட கொள்ளையன் பேபி சரோஜாவின் கையில் கிடந்த 2 தங்க வளையல்களையும் பறித்துவிட்டு, மேல்மாடிக்கு சென்று வீட்டையொட்டி நின்ற மரத்தின் வழியாக கீழே இறங்கி தப்பிவிட்டான்.

கதவு திறக்கப்படாததால் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து முன்புற கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது சோபாவில் பேபி சரோஜா இறந்து கிடந்தார். சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. பேபி சரோஜாவை கொலை செய்து விட்டு தப்பிய  கொலையாளியை போலீசார் தேடி வருகிறார்கள்.

இதனிடையே, கொள்ளையன் தப்பிச்செல்லும்போது செயின் மற்றும் 2 வளையல்களையும் தவறவிட்டுவிட்டான். அவை மரத்தின் அருகில் கிடந்தது. போலீசார் அவற்றை கைப்பற்றியுள்ளனர். மேலும் கொலையாளி வந்து வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த பைக்கையும் பறிமுதல் செய்தனர். அந்த பைக்கில் செல்போன் மற்றும் ஒரு பையில் ஆடைகள் இருந்தன. அவற்றையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பைக் கொலையாளிக்கு சொந்தமானதா அல்லது திருட்டு பைக்கா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

நகைக்காக வீடு புகுந்து மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

 

Similar News