பயங்கர கனவா வருது.. திருடிய சிலைகளை திருப்பிக் கொடுத்த மர்மநபர்கள்..!
பயங்கர கனவா வருது.. திருடிய சிலைகளை திருப்பிக் கொடுத்த மர்மநபர்கள்..!
உத்தரபிரதேசம் மாநிலம் சித்ரகூட் மாவட்டத்தின் தருஹா என்னும் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான பாலாஜி கோவில் உள்ளது.
இங்கு, கடந்த 9-ம் தேதி இரவு, பல கோடி மதிப்பிலான 16 சுவாமி சிலைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில், திருடுபோன ஆறே நாட்களில் 16 சிலைகளில் 14 சிலைகளை அந்தக் கோவில் அர்ச்சகரின் வீட்டின் அருகே திருடர்கள் வைத்து விட்டுச் சென்றுள்ளனர். கூடவே ஒரு கடிதத்தையும் வைத்துள்ளனர்.
அந்த கடிதத்தில், ‘கோவிலில் சிலைகளை திருடியதில் இருந்து தொடர்ச்சியாக பயங்கரமான கனவுகளாக வருகின்றன. இதனால் நிம்மதி இழந்துவிட்டோம்.
எனவே, திருடிய சிலைகளை மீண்டும் கோவிலில் ஒப்படைக்க முடிவு செய்தோம்' என எழுதியிருந்தனர். கோவிலில் காணாமல் போன சிலைகள் தனது வீட்டின் அருகே கிடைத்துள்ளதை போலீசாருக்கு அர்ச்சகர் தெரிவித்தார்.
இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். மேலும், மீதமுள்ள 2 சிலைகளின் நிலை என்ன என்பது தொடர்பாக தகவல் இல்லை. இதனால் போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.
சிலைகளை திருடியவர்களே, திருடியதற்காக தங்களுக்கு பயங்கரமான கனவுகள் வருவதாக பயந்து சிலைகளை வைத்து சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.