பயங்கர நிலநடுக்கம்.. உயிரிழப்பு 920ஆக அதிகரிப்பு !!

பயங்கர நிலநடுக்கம்.. உயிரிழப்பு 920ஆக அதிகரிப்பு !!;

Update: 2022-06-22 18:08 GMT

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால், குறைந்தது சுமார் 920 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.  

ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1  ஆக பதிவாகியுள்ளது. கோஸ்ட் நகரிலிருந்து 44 கி.மீ தொலைவில் சுமார் 51 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

ஆனால் தொடக்கத்தில் எவ்வித தகவல்களும் வெளிவரவில்லை. ஆனால் சிறுது நேரத்திலேயே நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளிவந்தது. 

இந்த நிலநடுக்கத்தின் பாதிப்புகளால் குறைந்தது 920 பேர் உயிரிழந்திருக்கக்கூடும் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கான கட்டிடங்களும் வீடுகளும் இடிந்து விழுந்த நிலையில், இடிபாடுகளை சிக்கியவர்களை மீட்கும் பணி விரைவாக நடந்து வருகிறது. பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக நிவராண உதவிகள் அனுப்பப்பட்டுள்ளதாக தலிபான் அரசு தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 


newstm.in
 

Tags:    

Similar News