ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே பயங்கர நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு...!

ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே பயங்கர நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு...!

Update: 2022-03-16 22:29 GMT

ஜப்பானின் புகுஷிமா பகுதி அருகே இன்று அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. வட கிழக்கு கடற்கரை பகுதியில் ஏற்பட்ட அடுத்தடுத்து இரு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் ரிக்டர் அளவில் 7.1 ஆகவும், பின்னர் மீண்டும் ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது.

தலைநகர் டோக்கியோவில் இருந்து வடகிழக்கே 297 கிமீ தொலைவில் புகுஷிமா நகரின் கடற்கரை பகுதி அருகே இன்று இரவு இந்திய நேரப்படி 8.06 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி இரவு 11.36 மணி) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலநடுக்கத்தால் கட்டங்கள் குலுங்கின. இரவு என்பதால் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த மக்கள் நிலநடுக்கத்தை தொடர்ந்து அலறியடித்துக்கொண்டு தெருக்களில் தஞ்சமடைந்தனர். லட்சக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நிலநடுக்கத்தையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News