தேர்தல் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் பயங்கர தீ விபத்து!!

தேர்தல் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் பயங்கர தீ விபத்து!!

Update: 2022-02-14 08:09 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா அலுவலகத்தில் உள்ள பழைய தேர்தல் பொருட்கள் வைப்பறையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

பரமக்குடி தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் தொடர்பான ஆவணங்கள் மற்றும் முன்பு பயன்படுத்தப்பட்ட பெட்டிகள் அனைத்தும் இங்கு வைக்கப்படுவது வழக்கம். இதேபோல் தாலுகா அலுவலர்களால் பறிமுதல் செய்யப்பட்ட டூ வீலர், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களும் இங்கு நிறுத்தப்பட்டுள்ளன.

50 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள இந்த தகர ஷெட்டில் மின் இணைப்பு நீண்ட காலமாக துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு கோடவுனில் இருந்து லேசான புகை கிளம்பியது.

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீயின் வேகம் அதிகரித்ததால் தண்ணீர் பற்றாத நிலையில் வாகனம் திரும்பியது. இந்த ஷெட்டிற்கு அருகில் பரமக்குடி கிளை சிறைச்சாலை இயங்கி வருவதுடன், தாலுகா அலுவலக கட்டடம் உள்ளது.

தீயணைப்பு வாகனம் வர தாமதம் ஏற்பட்ட நிலையில், நகராட்சி உள்ளிட்ட அலுவலகங்களிலும் தண்ணீர் வாகனங்கள் இல்லாததால் தீயை அணைப்பதில் தாமதமானது. அருகில் உள்ள நீதிமன்ற வளாக ஆழ்குழாயில் இருந்து தண்ணீர் வழங்கப்பட்டது.

இந்த தீ விபத்தில் ஐந்துக்கு மேற்பட்ட டூவீலர்கள் மற்றும் ஆட்டோ என எரிந்து வீணானது. பொருட்கள் கருகின. பெரும் போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

newstm.in

Similar News